Tuesday, July 7, 2015

‘டிஜிட்டல் இந்தியா’ தரும் வேலையும் கல்வியும் - தி இந்து

முன்பெல்லாம் மின்சாரக் கட்டணம் உள்பட அரசு அலுவலகங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களைக் கட்டுவதற்கு நமது நேரமும் உழைப்பும் வீணாகும். நீண்ட வரிசைகளில் காத்துக் கிடப்போம். தற்போது உட்கார்ந்த இடத்திலிருந்தே ஆன்லைனில் பணத்தை ஒரு கிளிக்கில் அனுப்பிவிட்டு வேறு வேலையைப் பார்க்கிறார்கள். அரசின் செயல்பாடுகள் நவீனமாவது மக்களுக்கு நல்லதுதானே!

நவீனமான அரசு நிர்வாகத்தை இப்போது ‘இ-கவர்னன்ஸ்’ என்று அழைக்கிறார்கள். இந்த நவீனமும் காலாவதியாகிக்கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறை அதிநவீனத்தை எம்- கவர்னன்ஸ் (மொபைல் கவர்னன்ஸ்) என்று அழைக்கிறார்கள்.

இன்றைய உலகில் பல நாடுகள் இந்த அதிநவீன நிர்வாக முறைக்கு மாறிவருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் முன்னேறுவதற்காக ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைக்கும் இணையம்

உலகளவில் அரசுகளின் செயல்பாடுகளில் இணையத்தின் பங்கு மேலும் மேலும் அதிகரித்துவருகிறது. உலகளவில் இணையத்தில் இணைக்கப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டிலேயே சுமார் 1,250 கோடியைத் தாண்டிவிட்டது. உலகில் உள்ள மனிதர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட இது அதிகம். இது இன்னும் ஐந்து வருடத்துக்குள் இரு மடங்கு முதல் நான்கு மடங்கு வரை மேலும் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்தையும் இணைத்துப் பிணைத்து இணையம் தொடர்ந்து மேலும் மேலும் விரிந்து வருகிறது.

மத்திய அரசு அறிவித்துள்ள ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தில் இணையத்தால் இணைக்கப்பட்ட பொருள்கள்தான் முதுகெலும்பாக இருக்கின்றன. எத்தனையோ அரசுத் திட்டங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லக்கூடியதல்ல இந்தத் திட்டம். இது அரசின் பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெருந்திட்டம். இந்தத் திட்டம் சரியாக அமலாக்கப்பட்டால் அரசின் செயல்பாடுகளில் ஒரு தலைகீழ் மாற்றத்தை மக்களால் உணர முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் அடிப்படையான சில மாற்றங்களை முக்கியமான துறைகளில் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

எங்கும் எதிலும் ஸ்மார்ட்

மக்களுக்குக் கிடைக்கக்கூடிய தண்ணீரை விநியோகிப்பது உள்ளிட்ட அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் ‘ஸ்மார்ட் தண்ணீர்’ என்ற பெயரில் மாற்றமடைய உள்ளன. தெருக் குழாய்களில் வரும் தண்ணீரின் தரத்தைக் கண்காணிக்கிற கருவிகள் இனி இருக்கும். அவை புதிதாக உருவாகவுள்ளன. ஆறுகளிலும் குளங்களிலும் அணைகளிலும் உள்ள தண்ணீரைக் கண்காணிப்பதற்கும், தண்ணீர் தொடர்பான பேரழிவு நிகழ்வுகளிலிருந்து பாதுகாப்பதற்கும் கருவிகள் தயாரிக்கப்படும். அவை முழுவதும் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இந்த மொத்த நடைமுறையும் அதிநவீனப்படுத்தப்படும்.

ஸ்மார்ட் சுற்றுச்சூழல், ஸ்மார்ட் நலவாழ்வு, ஸ்மார்ட் விவசாயம், ஸ்மார்ட் திடக்கழிவு மேலாண்மை என்ற பெயர்களிலும் அரசின் செயல்பாடுகள் அதிநவீனப்படுத்தப்பட்டு தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன என்கிறது இது பற்றிய அரசின் கொள்கை அறிக்கை.

ஸ்மார்ட் நகரங்கள்

இந்தியாவில் சுமார் ஆறு லட்சம் கிராமங்கள் உள்ளன. இரண்டரை லட்சம் கிராமங்களிலாவது ‘பிராட் பேண்ட்’ இணையத்துக்கான தொடர்பை ஏற்படுத்துவது என்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று.

இத்தகைய பிரம்மாண்டமான பணிகளுக்கான உள்கட்டமைப்பு களுக்காக அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் சேர்ந்து இந்தத் திட்டத்தில் நான்கு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.

இந்தியாவின் முக்கியமான பகுதிகளில் 100 ஸ்மார்ட் நகரங்களை அறிவித்து அவற்றில் மிக நவீனமான வசதிகளை உருவாக்குவது இதன் நோக்கம். தமிழகத்திலும் 12 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொழிலும் வேலையும்

இந்தத் திட்டத்தின் மூலம் 18 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்கிறது மத்திய அரசு. அதி நவீன மின்னணுக் கருவிகளை இந்தியாவிலேயே உற்பத்திசெய்ய வேண்டும் என்றும் அரசு முயல்கிறது. தற்போது இந்தியாவுக்குத் தேவையான மின்னணுப் பொருள்களில் 65 சதவீதம் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இத்தகைய உற்பத்தியைச் செய்ய முயல்பவர்களுக்கு ஆரம்பக் கட்டத்தில் சலுகைகளையும் அரசு அளிக்கும். உற்பத்திப் பொருள்களையும் அரசே கொள்முதல் செய்யவும் உள்ளது.

புதிய கல்வி வாய்ப்புகள்

தற்போதுள்ள பொறியியல் பாடத்திட்டத்தில் பி.டெக். எம்.டெக். அளவிலும், டாக்டர் பட்டம் உள்ளிட்ட, ஆராய்ச்சிப் படிப்புகளின் அளவிலும் ‘இணையத்தால் இணைக்கப்பட்ட பொருள்கள் பற்றிய பாடமும்’ இணைக்கப்படவுள்ளது.

இணையத்தால் இணைக்கப்பட்ட பொருள்கள் பற்றிய பாடம் தொடர்பான படிப்புகளில் 6 வாரங்கள், மற்றும் 2 வாரங்களில் படிக்கக்கூடிய சான்றிதழ் படிப்புகளும் கல்வி நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்து அவற்றைச் சமர்ப்பிப்பவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளன.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தகவல்தொழில் நுட்பத் திறன் படைத்தவர்களாக ஒரு கோடி மாணவர்களை உருவாக்குவதற்கு அரசு முயல்கிறது என்கிறது மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை.

‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தைத் திறன்மிக்க முறையில் செயல்படுத்தி மேம்படுத்துவதற்கு இத்தகைய மாணவர்களிலிருந்து உருவாகும் ஊழியர்களே அடித்தளமாக இருப்பார்கள்.

கல்வியும் தொழிலும்

தொழில் நிறுவனங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே இது தொடர்பான மாநாடுகளும் பயிலரங்குகளும் நடத்தப்படவுள்ளன. ஐ.ஐ.டி. நிறுவனங்களில் எம்.டெக் அளவிலான இரண்டு வருடக் கால ஆய்வுகளுக்கு உதவித்தொகைகள் வருடந்தோறும் 150 பேருக்கு வழங்கப்படும்.

தொழில் நிறுவனங்களுக்கு எந்த வகையான திறன்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கண்டறிந்து கல்வி நிறுவனங்களில் அவற்றை உருவாக்கும் வகையிலான புதிய பேராசிரியர் பதவிகள் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படவுள்ளன.

தொழில் நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயலாற்றக்கூடிய புதிய ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன. கல்வியாளர்களின் அறிவைத் தொழில் நிறுவனங்கள் பெறுவதற்கும் தொழில் நிறுவனங்களில் ஏற்படும் புதிய மாற்றங்களின் அனுபவங்களைக் கல்வியாளர்கள் பெறுவதுமாக இருதரப்பும் பயன்பெறும் வகையில் திட்டமிட்ட செயல்பாடுகள் ஏற்படுத்தப்படவிருக்கின்றன.

கல்வி வளாகங்களிலும் தொழில்நிறுவனங்களிலும் பல புதிய வாய்ப்புகளை டிஜிட்டல் இந்தியா திட்டம் உருவாக்கவே செய்யும்.

Courtesy : The Hindu-Tamil

Wednesday, February 4, 2015

இணைய வணிகத்தில் வேலை தயார்! - தி இந்து

இணைய வணிகம் வேலை வாய்ப்புக்கள் :



இணைய வணிகம் சூடுபிடித்திருக்கும் காலம் இது. இணையதள வசதி கொண்ட கணினி வழியே நடத்தப்படும் இந்த இணைய வணிகத்தில் தற்போது இந்தியர்கள் பலர் நுகர்வோராக இருக்கிறார்கள். கூடிய விரைவில் நம் இளைஞர்கள் இணைய வணிகம் நடத்தும் நிறுவனங்களில் ஊழியராகவும் மாறுவார்கள் என்கின்றனர் வணிக உலக ஜாம்பவான்கள்.

கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேருக்கு இணைய வணிக நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு முக்கியக் காரணம், நகர்ப்புறம் மட்டுமின்றி புறநகர் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும் இணைய வணிக வசதியை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். இணைய வணிகத்தின் வீச்சு 2015-ல் இன்னும் 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்நாப் டீல், ப்லிப் கார்ட், அமேசான் போன்ற பெரு நிறுவனங்கள் முழு மூச்சாக இணைய வணிகத்தில் இறங்கியதால், அத்துறையில் பணியாளர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.

தொழில்நுட்பப் பிரிவு, டிஜிட்டல் சந்தையை நிர்வகித்தல், கிடங்குகளை நிர்வகித்தல், பேக்-ஆபீஸ் வேலைகள் உள்ளிட்ட தளங்களில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் இருக்கும் என மனிதவளத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

உலகின் முதல் 10 பணி அமர்த்தும் துறைகளில் இணைய வணிகத் துறை வெகு சீக்கிரம் இடம் பெறும் எனும் எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

Saturday, December 13, 2014

(Website) வெப்சைட் பெயர் வந்தது எப்படி? ஒரு சுவாரஸ்யமான பிளேஷ்பேக்! - விகடன்

இன்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்குத்தான் தெரியாது? இணையத்தின் வரலாறு கூட பெரும்பாலானோருக்கு சுருக்கமாக தெரிந்திருக்கலாம். ஆனால், இணையதளங்களுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது எப்படி என்ற விவரம் எத்தனை பேருக்கு தெரியும்?

வெப்சைட் என்றதும் இணையத்தின் அங்கமான தனிப்பட்ட இணையதளங்களை எல்லோரும் இயல்பாக புரிந்து கொள்கின்றனர். வெப்சைட் என்பது அவற்றுக்கான இயற்கையான பெயர் போலவும் இருக்கிறது. இருப்பினும் வெப் எனப்படும் வலை உருவாக்கப்பட்ட போது, தனிப்பட்ட பக்கங்களை எப்படி குறிக்கலாம் என விவாதிக்கப்பட்டது.

அப்போது டிம் பெர்னர்ஸ் லீ ( வலையை உருவாக்கியவர்) ஒரு நூதனமான யோசனையை முன் வைத்திருக்கிறார். இப்போது வெப்சைட் என்று அறியப்படும் தளங்களை அவர் சைக்கோ ஹிஸ்டரி என்று குறிப்பிட விரும்பியிருக்கிறார்.
வலைக்கும் உளவியலுக்கும் என்ன சம்பந்தம்? எப்படி இந்த பெயரை அவர் பரிந்துரைத்தார்?

லீயின் இந்த விருப்பத்திற்கு காரணம் அவருக்கு அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோ மீது இருந்த ஆர்வம்தான். எதிர்காலவியல் சார்ந்த கதைகளுக்காக அறியப்படும் அசிமோ பவுண்டேஷன் கதை வரிசையில், வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி தொலைநோக்கிலான கற்பனையால் விவரித்திருப்பார். அதில் வரும்  பேராசிரியர் ஹாரி செல்டன், வரலாறு, சமூகவியல் மற்றும் கணிதத்தை கலந்து மக்களின் பழக்க வழக்கங்களை கணிக்கும் முறையை உருவாக்கியிருப்பார். இதைத்தான் சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருப்பார்.

லீயும் இதே பெயரை வைக்க விரும்பினார். ஆனால், அவருடன் சேர்ந்து விவாதித்தவர்கள் வெப்சைட் என்ற பெயரையே வலியுறுத்தியிருக்கின்றனர். லீயும் அதை ஏற்றுக்கொள்ளவே, வெப்சைட் என்ற பெயர் இணையதளங்களுக்கு சூட்டப்பட்டது.

வலை என்னவாக உருவாகப்போகிறது என தெரியாத காலகட்டத்தில், இணைப்புகளை கொண்டிருக்கும் பக்கங்களுக்கு, டிம் பெர்னர்ஸ் லீ சைக்கோஹிஸ்டரி என பெயர் சூட்ட நினைத்ததை இன்று திரும்பி பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கும்.

வெப்சைட் பெயர் சூட்டப்பட்ட விதம் பற்றிய இந்த சுவாரஸ்யமான பிளேஷ்பேக்கை, லீயின் சகாக்களில் ஒருவரான பிரிட்டன் பேராசிரியர் வெண்டி ஹால் சிநெட்.காம் இணைதளத்திற்கு அளித்த பேட்டியில்  பகிர்ந்து கொண்டுள்ளார்.

இணைய முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் ஹால், பிரிட்டனில் தொழில்நுடப்துறையில் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் ஒருவராக கருதப்படுபவர். 2006ஆம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ் லீயுடன் இணைந்து இவர் வெப் சயின்ஸ் டிரஸ்ட் எனும் அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார்.

வெப்சைட்டை வேறு பெயரில் யோசித்து பார்ப்பதே கூட அந்நியமாக தோன்றும் அளவுக்கு இந்த பெயரும் அதன் கருத்தாக்கமும் நமக்கு நெருக்கமாகிவிட்டது.

மாறாக இணையதளங்களை சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்!

பேராசிரியர் வெண்டி ஹால் பேட்டி: http://www.cnet.com/news/inventor-of-the-web-wanted-to-call-web-sites-psychohistory/

-சைபர் சிம்மன் - 

Monday, November 17, 2014

உங்களை பிராண்டிங் செய்வது எப்படி? - விகடன்

உங்களை பிராண்டிங் செய்வது எப்படி?

வணிகத்தில் பிராண்டிங் என்பது ஒரு கலை என்று குறிப்பிடுவார்கள். ஒரு பொருளை மக்கள் மனதில் பதிய வைப்பதுதான் பிராண்டிங். ஒரு குறிப்பிட்ட வகை பொருளை நினைத்தால் குறிப்பிட்ட பிராண்ட் தான் மனதிற்கு தோன்றும். வியாபாரத்தில் அப்படித்தான் பிராண்டிங் செய்வார்கள். 
 
ஆனால் அதே போல் மனிதனை பிராண்டிங் செய்ய முடியும். திருநெல்வேலி அல்வா, திண்டுக்கல் பூட்டு, மதுரை மல்லிகை இதனை போல உங்களையும் நீங்கள் பிராண்டிங் செய்துகொள்ள முடியும். 
 
தொழில்நுட்ப உலக ஸ்டீவ் ஜாப்ஸ், கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், நடிப்பில் ரஜினிகாந்த், பாப் இசையில் மைக்கேல் ஜாக்‌சன் என முக்கியமான பிராண்ட்-ஆக மாறி நிற்கும் தனிமனிதர்களை சொல்லலாம். 
 
இவர்களைப் போல நீங்கள் உங்களையும் பிராண்டிங் செய்யலாம். எப்படி? 
 
உங்களுக்கு தெரியாமல் நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் நன்கு பரிட்சயமிக்கவராக இருப்பீர்கள். உங்களிடம் கேட்டால், அந்த விஷயத்திற்கு தெளிவு கிடைக்கும் என உங்களைச் சுற்றி இருப்பவர்கள் நினைப்பார்கள். அதுபோன்ற விஷயங்களில் உங்களின் தேடல்களையும், அதில் ஏற்படும் புதிய மாறுதல்களையும் அப்டேட் செய்து கொள்ளுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் அலுவலகத்திலோ அல்லது உங்களை சுற்றியுள்ள குழுவுக்கோ அது குறித்த சந்தேகம் எழுந்தால் அவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். இப்படி மற்றவர்கள் உங்களைத் தேடி வரும்போது நீங்கள் ஒரு பிராண்ட் ஆக மாறியிருப்பீர்கள். 

ஒரு வேலையை எல்லாரும் செய்வது போல் செய்தால் அது தனியாக தெரியாது. அப்படி தெரிய வேண்டும் எனில், ஒரு நிறுவனம் தன் தயாரிப்பின் சிறப்பம்சத்தை வைத்து ஒரு பொருளை எப்படி பிராண்ட் செய்கிறதோ, அதுபோன்று உங்களிடம் உள்ள தனித்துவத்தை முன்னிலைப்படுத்தி உங்களை பிராண்ட் செய்துகொள்ளுங்கள். அதனால் உங்களிடன் சில வேலைகளை கொடுத்தால், அதனை புதுமையாகவும், சிறப்பாகவும் செய்ய முடித்துக் காட்டுங்கள். ஒருமுறை நீங்கள் செய்துகாட்டினால், அடுத்தமுறை அந்த உங்களைத் தேடி ஓடிவரும். 
 
பிராண்டுகள் என்பது விளம்பரம் செய்வது என்று நினைத்தால் அது தவறு. ஒரு நிறுவனம் தயாரிக்கும் விளம்பரம் என்பது வெறும் விளம்பரப்பலகையோடும், வீடியோக்களோடும் நின்றுவிட்டால், அது தோல்விதான். அதேபோல், ஒருவர் தனக்கு இந்த விஷயம் தெரியும் என்று நிறுத்திக்கொண்டால் அதுவும் தவறு. அதனை தொடர்ந்து செயல்படுத்தி கொண்டே இருந்தால்தான், அதனை மாற்றும் வெற்றி விகிதம் கண்டறியப்பட்டு அதில் பிரபல பிராண்டாக உங்களை மாற்றிக்கொள்ள முடியும்.
 
உங்களை பிராண்டிங் செய்வது எப்படி?

1.மல்டி டாஸ்கிங் நபர் என்று கூறும் அளவிற்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்யும் நபராக இருங்கள். அது உங்களை தனித்து காட்டும்.
 
2.உங்களது ஒரு நாள் வேலை என்பது மற்றவர்களோடு ஒப்பிட்டால் அதனைவிட அதிகமான செயல்திறன்மிக்கதாக இருக்குமாறு மாற்றியமைத்து கொள்ளுங்கள்.
 
3.உங்களிடம் கேட்டால் இந்த விஷயம் தெரியாது என்ற நிலை உருவாகாமல் பார்த்து கொள்ளுங்கள். அப்படி இருக்கும் போது தான் நீங்கள் வெளி உலகிற்கு அடையாளம் காணப்படுவீர்கள்.
 
4.விளம்பரம் என்பது நீங்கள் எனக்கு இது தெரியும் என்று இல்லாமல் இவருக்கு இது நன்றாக இது தெரியும் என்று பரிந்துரைக்கும் அளவில் இருப்பது அவசியம்.

- விகடன்

Thursday, November 13, 2014

ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு உதவும் அனலிடிக்ஸ்(Ecommerce Web Analytics) - The Hindu

வெப் அனலிடிக்ஸ்: 


டேட்டா அனலிடிக்ஸ்(Data Analytics) குறித்து கேட்க, படிக்க, சிந்திக்க எல்லாம் நன்றாகவே இருக்கின்றது. இதில் சொல்லப்படும் பல விஷயங்கள் கற்பனைக்கு எட்டாதவையாக இருக்கின்றன. உபயோகங்களும் உபத்திரவங்களும் சரிசமமாக இருக்கும் போல் இருக்கின்றது. பாதிக்கும் பாதி கனவும் கற்பனைக் கதையும் போல் அல்லவா இருக்கின்றது. இதனால் நிஜத்தில் இன்றைக்கு பலனடையும் மனிதர்கள் மற்றும் நிறுவனங்கள் ஏதும் இருக்கின்றதா? என்ற கேள்வி உங்கள் அனைவரின் மனதிலும் தோன்றியிருக்கும். இது பற்றிய உதாரணங்களை இந்த வாரம் பார்ப்போம்.

விளம்பரங்களால் பயன் உண்டா?


நிறுவனங்கள் பெரும்பாலும் விளம்பரம் மற்றும் இன்டர்நெட்டில் பெரிய அளவில் பாப்புலராகவும் தங்களைப்பற்றியும் தங்களுடைய தயாரிப்புகள் பற்றியும் முழுமையான விவரங்கள் இணையதளங்களிலும், சோசிஷியல் வெப்சைட்களிலும் இருப்பதை விரும்புகின்றன. இதற்கான செலவினங்கள் மிகவும் அதிகமாக இருக்கும். அதிலும் உலகளாவிய வியாபாரத்தில் இருக்கும் நிறுவனங்கள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. இந்த மாதிரியான செலவுகளைச் செய்கின்றோமே? இதனால் என்ன பலன் என பல நிறுவனங்களும் யோசிக்கவே செய்கின்றன.

கடுமையான போட்டியும் லாபக் குறைவுகளும் இருக்கும் கால கட்டத்தில் மிகப்பெரிய அளவில் கம்பெனி நிர்வாகங்கள் இது போன்ற செலவுகளைச் செய்வதற்கு முன்னால் சிந்திக்கின்றன. செய்கின்ற செலவுக்கும் அதனால் வரும் பலனுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா என யோசிக்கின்றன. இது போன்ற சிந்தனைகள் தோன்றும் போது அனலிடிக்ஸ்தனை ஒரு ப்ரொபஷனல் சரிவீஸாக வழங்குகின்ற சர்வீஸ் நிறுவனங்களுக்கு வேலை கிடைக்கின்றது.

அனலிடிக்ஸ் தரும் தகவல்


இவ்வளவு பணம் நாங்கள் எங்களுடைய இன்டர்நெட் தளங்கள், சோஷியல் மீடியா நெட்வொர்க்குகள் மற்றும் ப்ரொமோஷன்களுக்காக செலவு செய்கின்றோம். இதனால் என்ன பிரயோஜனம் என்பதை கொஞ்சம் ஆராய்ந்து சொல்லுங்கள் என இந்த நிறுவனங்கள் பணிக்கப்படுகின்றன. இந்த அனலிடிக்ஸ் சர்விஸ் நிறுவனங்கள் இணையதளத்திலும் சோஷியல் நெட்வொர்க்கிலும் வந்து கம்பெனியின் ப்ராடெக்ட் மற்றும் சர்விஸ் குறித்து அறிந்துகொள்பவர்களின் விவரங்களை சேகரிக்க ஆரம்பிக்கின்றன.
இந்த விவரங்களையும் கம்பெனியின் பில்லிங் விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களிடம் சாமான் வாங்கிய இத்தனை பேர் உங்கள் வெப்சைட் மற்றும் சோஷியம் மீடியா விவரங்களை வைத்தே உங்களை வந்தடைந்தனர் என்று சொல் கின்றனர். இன்னமும் தெளிவாக இந்த வியாபாரத்தை செய்தவர்களில் இத்தனை பேர் உங்களுடைய இன்டர்நெட் ப்ரொமோஷன் மூலமாக மட்டுமே வந்தவர்கள் என்பதையும் புட்டுப்புட்டு வைத்துவிடுகின்றன. இதனால் நிறுவனங்கள் தாங்கள் இணையத்திற்காக செய்யும் செலவு நியாமானதுதானா? அந்த செலவிற்கான பலாபலன் வந்து சேர்கின்றதா என்பதை தெரிந்துகொள்கின்றன.

சரியாக கணிக்க…


இணையதளம் என்று மட்டுமில்லை. ஏனைய மீடியாக்களிலும் களத்திலும் செய்யப்படும் ப்ரொமோஷன்களில் ஏற்படும் குழப்பத்தை தீர்க்கவும் அனலிடிக்ஸ் பல நிறுவனங்களுக்கு உதவுகின்றது. காலையில் பேப்பரை திறந்தால் வாங்கீட்டீங்களா? என விளம்பர வருகின்றது. டீவியைப் போட்டால் இப்போது விற்பனையில் என்கின்றது. ஆபீஸ் போகும் போது எப்ஃஎம் ரேடியோ கேட்டால் சரக்கு உள்ள வரையே ஆஃபர் என்கின்றது. நேராக கடைக்குப் போய் பார்த்தால் ஓ அந்த விளம்பரத்தை பார்த்து வந்தீர்களா? அது புது ஸ்டாக். இன்னும் வரலை இல்லை அது வந்த உடன் தீர்ந்து போய் விட்டது என்று வெறுப்பேற்றி போட்ட விளம்பரத்தை நீர்த்துப்போக செய்துவிடுவார்கள் கடைக்காரர்கள்.

விளம்பரமும் அதனால் ஒரு ஏரியாவில் உருவாகும் டிமாண்டும் சரியாக கணிக்கப்பட வேண்டும். அப்படி கணிக்கப்பட்டால் மட்டுமே விளம்பரத்தினால் பலன் இருக்கும். இல்லாவிட்டால் தண்டச் செலவுதான். சரக்கு கடையில் இல்லாமல் விளம்பரத்தை நீட்டி முழக்கி என்னப் பயன். ஒரு வருஷம் அல்லது ஒரு சீசனில் இந்தத் தவறு நடந்தால் பராவாயில்லை. தொடர்ந்து ஓவ்வொரு சீசனிலும் இதே தவறு நடந்தால் என்னவாகும். கம்பெனியின் பெயர் கெட்டு குட்டிச்சுவராகும். இந்த இடத்திலும் அனலிடிக்ஸ் உதவுகின்றது.
கடந்த சிலவருடத்தில் நடத்தப்பட்ட விளம்பர கேம்ப்பெயின் எந்த அளவுக்கு டிமாண்டை அந்த நாட்களில் அதிகரித்தது என அனலிடிக்ஸின் மூலம் ஆராயலாம். அதற்கு ஏற்றாற்போல் கடைகளுக்கு ஸ்டாக்கை அனுப்பி விட்டு பின்னர் விளம்பரம் செய்யலாம். இந்தவகை உபயோகத்திலும் அனலிடிக்ஸ் இன்றைக்கு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.

வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்


அடுத்த நாம் பார்க்கப்போவது மற்றுமொரு ஆன்லைன் உதார ணத்தை. ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் ஏகப்பட்ட விற்பனை யாளர்களை தங்களுடன் இணைத்துக் கொண்டு இயங்கி வருகின்றது. மறுபக்கம் எக்கச்சக்கமான வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கு கின்றனர். விற்பனையாளர்கள் சிலர் வாடிக்கையாளரை ஏமாற்றலாம். இரண்டு நாட்களில் தருகின்றேன் என்று சொல்லி இருபது நாள் ஆக்கலாம். செல்போன் என்று சொல்லி செங்கலை அனுப்பி விடலாம்.

இது ஒரு புறம் என்றால் வாடிக்கையாளர்களும் வீண் பிரச்சினை செய்யலாம். ஆயிரத்து ஐநூறு ருபாய்க்கு போன் ஆர்டர் போட்டு விட்டு அதில் கேமரா சரியில்லை. பேட்டரி பத்துநிமிடம்தான் நிற்கின்றது. ராங் நம்பருக்கு கால் போகின்றது என பொய்யான புகார் களை அளந்துவிடலாம்.

விற்பனயாளரானாலும் சரி, வாடிக்கையாளரானாலும் சரி யார் பொய் சொன்னாலும் அலப்பறை கொடுத்தாலும் கெடுவதென்னவோ ஆன்லைன் விற்பனை நிறுவனத் தினுடையதுதானே! நியாயமற்ற முறையில் வியாபாரம் செய்யும் விற்பனையாளரையும், சம்பந்தா சம்பந்தம் இல்லாத குறைகளைச் சொல்லும் வாடிக்கையாளரையும் கண்டுபிடித்து கழற்றிவிட்டால் வியாபாரம் ஸ்மூத்தாய் போகும் இல்லையா? இதில் அனலிடிக்ஸ் மிகவும் உதவுகின்றது.

தப்பான பொருள், வாரக்கணக்கில் தாமதம், ஏமாற்றுப்பேர்வழி என ஒரு விற்பனையாளரை குறித்து கம்ப்ளெயிண்ட் வருகின்றதா? வெறுமனே தண்டிக்காமல் ஒரு ஏரியாவில் இருந்து மட்டும் வருகின்றதா? ஒரு குடெளனில் இருந்து செல்லும் பொருட்களுக்கு மட்டும் வருகின்றதா? ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் தயாரிப்புகள் விற்கப்படும் போது வருகின்றதா? என்றெல்லாம் அனலிடிக்ஸ் பிரித்துமேய்ந்து தகவல்களைச் சொல்லிவிடும்.
பொதுவாக விற்பனையாளர் நல்லவரா? கெட்டவரா? அல்லது அவருடைய நிறுவனத்தில் இருக்கும் சில கருப்பு ஆடுகள் இந்தவிதமான பிரச்சினையை செய்கின்றதா? அதே ரகத்தில் தரத்தில் நம்முடன் இணைந்திருக்கும் வேறு விற்பனையாளர்கள் தரும் சேவையை விட இவர் தரும் சேவை குறைந்த ரகமா? அதிகமா? என்ற கேள்விக்கெல்லாம் அனலிடிக்ஸ் பதில் தந்துகொண்டிருக்கின்றது.

ஏனென்றால் ஒரு வகையான பொருட்கள் விற்பனை செய்யும் பல விற்பனையாளர்களின் தொழில் குணாதிசியமே அப்படி இருக்கப்போய் நிறைய விற்று அதனால் கம்ப்ளெயிண்ட்டும் அதிகம் வந்து ஹைலைட் ஆவதால் நம்முடன் இணைந்திருக்கும் நல்ல ஒரு நிறுவனத்துடன் தொடர்பை துண்டித்துக்கொள்ளக்கூடாது இல்லையா? தொழிலின் குணாதிசியமே அப்படி இருந்தால் இந்த நிறுவனம் போன பின் அடுத்த நிறுவனமும் அதே போன்ற கம்ப்ளெயிண்டிற்கு ஆளாகத்தானே செய்யும். எனவே நல்லது கெட்டதை தெரிந்துகொள்ள அனலிடிக்ஸ் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுக்கு அனலிடிக்ஸ் பெரிய அளவில் தற்போது உதவுகின்றது.

வாடிக்கையாளரையும் அறியலாம்


புடிச்சு ஜெயில்ல போடணும் சார் இவங்களை என விற்பனையாளர்களை பார்த்து கம்ப்ளெயிண்ட் சொல்லும் வாடிக்கையாளர் எல்லோருமே நல்லவர்களா என்ன? கேஷ் ஆன் டெலிவரி போட்டு சுத்தலில் விடுவது, பொருளை வாங்காமலேயே இது ஒரு வேலைக்காகாத சரக்கு என பின்னூட்டம் போடுவது, குண்டூசியை வாங்கிவிட்டு இமயமலை அளவுக்கு கம்ப்ளெயிண்ட் எழுதுவது என வாடிக்கையாளர்களும் பலவகைதானே.

இதுபோன்ற சிறப்பு வாடிக்கையாளார்களை கண்டறிந்து எக்ஸ்கியூமீ – உங்களுக்கு சப்ளை செய்யும் அளவுக்கு எங்களிடம் ஸ்டாக் இல்லை என்று கஸ்டமருடைய பேக்ரவுண்டை ஆராய்ந்துவிட்டு இணையதளத்தை அதுவாகவே சொல்ல வைக்கும் அளவுக்கு அனலிடிக்ஸ் பின்புலத்தில் இருந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. ரொம்ப சவுண்ட் விடும் பார்ட்டிகளை ப்ளாக் அவுட் செய்யும் டெக்னாலஜியும் நடப்பில் இருக்கின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

Thursday, August 21, 2014

டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) - பெரியளவில் வளரும் தொழில்துறை - தினமலர்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) :



இன்று தினமலர் கல்வி மலரில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையின் இப்போதைய நிலவரம் மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றி ஒரு கட்டுரை வெளியுட்டுள்ளது. மாணவர்களுக்கு பயனுள்ள இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழிலை மிகவும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளது தினமலர்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் - பெரியளவில் வளரும் தொழில்துறை:

பல தொழில் நிறுவனங்கள், தங்களின் வணிகச் செயல்பாடுகளை ஆன்லைன் முறையில் மாற்றிக்கொண்டு விட்டதால், டிஜிட்டல் மார்க்கெட்டிங் எக்சிகியூடிவ்களுக்கான தேவை பெரியளவில் அதிகரித்துள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில், 1.5 லட்சம் பணி வாய்ப்புகள் உருவாகியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் விளம்பரம், சோசியல் மீடியா மற்றும் வெப்சைட் டிசைன் உள்ளிட்ட பல்வேறு சேவைத் துறைகளில், ஒரு டிஜிட்டல் அவுட்சோர்சிங் மையமாக இந்தியா உருவாகி வருகிறது.

புதிய வாய்ப்புகள்

டிஜிட்டல் மீடியமை நோக்கி, நிறுவனங்களும், பயனாளிகளும் தங்களின் கவனத்தை திருப்புவதால், அத்துறையில், 2016ம் ஆண்டில், 1.5 லட்சம் பணி வாய்ப்புகள் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த 2014ம் ஆண்டில் மட்டும், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில், 25,000 புதிய பணி வாய்ப்புகள் இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. வேகமாக அதிகரித்துவரும் இ-காமர்ஸ் வணிக நடவடிக்கையால் மட்டுமின்றி, அதிகளவிலான இன்டர்நெட் மற்றும் மொபைல் போன் பயன்பாடு ஆகியவையும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பற்றாக்குறை

ஆனால், உண்மை நிலை என்னவெனில், தேவையைவிட, கிடைக்கும் தகுதியுள்ள பணியாளர்கள் மிகவும் குறைவு என்பதுதான். ஒவ்வொரு தனி தயாரிப்பும்(brand), டிஜிட்டல் மார்க்கெட்டிங் வியூகத்தில் வைக்கப்படுவதால், அதை செயல்படுத்துவதற்கான ஆட்களின் தேவை கட்டாயமாகிறது. இத்துறைக்கு தேவையான திறனும், தகுதியும் உடைய பணியாளர்கள் போதுமான அளவில் கிடைப்பது இன்றளவில் மிகவும் சிக்கலான சூழலாகும்.

இன்றைய வணிக உலகம் தனது அன்றாட செயல்பாட்டில் மிகப்பெரிய மாறுதல்களை சந்தித்துள்ளது. நிறுவனங்கள், தங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் தொடர்புகொள்ளும் முறையில், பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. டிஜிட்டல் மார்க்கெட்டிங்தான் அந்த மாற்றம்.

பெரிய மாற்றம்

இத்தகைய பெரு மாற்றம், டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர்களின் தேவையை பெரியளவில் அதிகரித்துள்ளது. இன்றைய நிலையில், இந்தியா, பெரியளவிலான டிஜிட்டல் மார்க்கெட்டிங் மையமாக உருவெடுத்து வருகிறது.

ஏனெனில், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து பல புராஜெக்ட்டுகள் வாங்கப்பட்டு, இந்திய நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. வணிக உலகைப் பொறுத்தவரை, இ-காமர்ஸ் துறையானது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிபுணர்களை பெரியளவில் பணியமர்த்தும் ஒரு களமாக மாறியுள்ளது.

பணி வாய்ப்பு

கார்ப்பரேட் நிறுவனங்களின் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றுவோர் மற்றும் புதிதாக படிப்பை முடித்து வெளிவரும் பட்டதாரிகள் ஆகியோருக்கு சிறப்பான பணி வாய்ப்புகளை டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை வழங்குகிறது.

எதிர்கால வாய்ப்புகள்

இத்துறையானது, சிறிதுகாலம் மட்டுமே பெரியளவில் இருந்து, பின்னர் அப்படியே அமுங்கிப்போய், பலர் வேலை இழக்கும் நிலைக்கு வருதல் என்பதைப் பற்றி எந்தக் கவலையும் கொண்டிருக்க தேவையில்லை என்றே இத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஏனெனில், நாளுக்கு நாள், இத்துறை விரிவடைந்து, இதுதொடர்பான பணி வாய்ப்புகள் எதிர்காலத்தில் பெருகி நிற்கும் என்று அவர்கள் உறுதி கூறுகிறார்கள்.

இதர பிரிவுகள்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில், வணிகப் பிரிவு மட்டுமே பிரதானமானதல்ல. அதுதவிர, சோசியல் மார்க்கெட்டிங், கன்டென்ட் கிரியேஷன் மற்றும் மேனேஜ்மென்ட், Search மார்க்கெட்டிங், ஈமெயில் மார்க்கெட்டிங், அனலிடிக்ஸ் மற்றும் வீடியோ புரடக்ஷன் போன்ற பல பிரிவுகளிலும் பணி வாய்ப்புகள் பரவிக் கிடக்கின்றன.

கட்டுரை இங்கே - http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=25929&cat=1


Monday, June 23, 2014

Google Search (SEO) and Ads (Adwords) Day Conference / Event in Bangalore and Mumbai, India

Google Search and Ads Day : A SEO and Adwords Conference

Google India invited Search and Ads day conference for Indian Webmasters and Advertisers held up in Bangalore and Mumbai. Its organized by Learn with Google Team.


Google Search / SEO Day Conference :


The Google Search day event helping to Indian SEO webmasters to learn more about Google search, algorithm, updates, SEO techniques, SERPs and organic results in Search engines.

Google Adwords / Ads Day Conference :


This Google Ads or Adwords day helps to learn more about Google AdWords and also covers adwords topics like Remarketing, Integrated Shopping and PLAs, and building a mobile business.

Conference Date :


In Bangalore India,

3rd July - Google Search Day  - A SEO webmasters conference
4th July - Google Ads Day - A Google Adwords conference

In Mumbai, India:

10th July - Google Search Day
11th July - Google Ads Day

Hurry up for your seat - Register Here